Tuesday, October 1, 2013

ஆனந்தமாய் இருந்தது

சலசலசல என
உள்ளங்கையில்
சாரல் தெரித்த
மழைத்துளி

கோவை இதழில்
பூக்கும் உன் கோவம்
என்னை குளிர வைக்கும்
பனித்துளி

Friday, September 20, 2013

குடை

தூக்கம் மறந்திடும்
நீ கனவில்
துக்கம் மறைந்திடும்
உன் நினைவில்

Saturday, March 24, 2012

பெண்-கியீன்

சிறகில் கூடிய
உறவை
வெட்டினாய்
இறக்கை இழந்து
உன் கூடுகள்
கட்டினாய்

Friday, March 23, 2012

நினைத்தாலே இனிக்கும் ..

கடந்தால்
குளிர் ஊட்டும்
முத்து மழை மூட்டம்
மூளை செயல் இழந்த
மருவானா தோட்டம்

Tuesday, March 30, 2010

உனைப்பார்த்த நினைவு

உறங்காது இரவு
ஆயிரம் கனவு
உனைப்பார்த்த நினைவு

ஒரு முனை காந்தம் போல்
உரசிப்போகும் பார்வை
மயக்கத்தில் மூன்றுமுறை
கடித்திகொண்டேன் நாவை

வெயில் போல
வெட்பம் ஏரிடும்
நீ விலகினால் என்
நிழலும் வாடிடும்

நேரம் தெரியாமல்
காத்திருப்பேன்
நீ நெருங்கும் நேரம்
மட்டும் நிறுத்தி வைப்பேன்

எனக்குள் பேசும்
உன் குரலை
என்னிடம்
பேச கூப்பிடுவேன்

இரவில் தினமும்
கொல்லுகிராய்
பகலில் எதயோ
மெல்லுகிராய்

தயக்கம் வந்து
குனிந்தது போல்
எனக்குள் உன்னிடம்
பேசிக்கொண்டேன்

பழக்கம் இல்லா
உற‌வுகள் போல்
பாதிவார்த்தையில்
திரும்பாதே

க‌ண் முன் வந்தாய்
கனவிலும் வந்தாய்
கடைசியில் அறிமுகம்
இல்லை என்றாய்

என் பகலும் இரவும்
இடைவெளி அதிகம்
என் விழியை திருடி
தூரம் சென்றாய்..

Sunday, November 1, 2009

மின்னல் ஒரு கோடி..

ரகசிமாய்
சிமிட்டும் கண்ணில்
கவர்ச்சியுடன்
சாரல் மழைகள்
அவசரமாய்
எனக்கும்
தருவாயா

பகலில் ஒரு
பட்டாம்பூச்சி
இரவெல்லாம்
உந்தன் ஆட்சி
விளக்கனைய‌
விடுமுறை
தருவாயா

பரவசம் பரவசம்
நீ காஷ்மீர் வனத் தேன்
பழரசம்

மாலை
நேரத் தென்றல்
கூட‌ உன்னை தேடி
அலைகிற‌து
என் வாசல் வந்து
உன் பெயர்
சொல்லி ஹலோ
சொல்ல‌ சொல்கிற‌து

வழியில் ஒரு மாற்றம்
பகலில் தடுமாற்றம்
நீ போகும் சாலை
தவிர‌ நான் போனால்
எதுவும் பிடிக்கவில்லை

இது காதல்தானா
புரியவில்லை
இந்த புரியா
இன்பம் பழகவில்லை

நீ வந்து
சொல்லிடு காதோரம்
என் உயிரும்
மீண்டும் குடியேரும்
முகில் முதுகில்
போவோம் வெகு தூரம்..

விடு விடு என
உதரிப்போவாயா
சடுகுடுவென‌
சண்டையிடுவாயா

துறத்தித்துறத்தி
காதல் செய்ய
என் வாழ் நாள்
முழுதும் பற்றவில்லை
காதல் தீப்போல்
பற்றவில்லை

உரையாமல் நகரும்
பனிமூட்டம்
உடன் வந்து
வாடைக் குளிரூட்டும்

வார்தைகளில்
மௌனம்
பறிமாற்றம்
மொழிகிளுக்கு
முதல்வரும்
ஏமாற்றம்

Wednesday, October 7, 2009

நடத்துனர் இருக்கை

இது ஒன்றும்
புதிதல்லை
பயனத்தில்
பரிவில்லை

வெளிப்படையான‌
உண்மை
உழைப்பில்
எதற்கு நன்மை

காயம் படும்
கோபம் விடும்
வார்த்தைகள்
வலிக்க மோதல்
உபச‌ரிப்பில்
எதற்கு காதல்

நகர்ந்து வந்த‌
பாதை கூட‌
நகர் வந்து
மறக்கும்

நின்று வ்ந்த‌
பயண‌ம் கூட‌
நிற்காது
மறக்கும்