Sunday, November 1, 2009

மின்னல் ஒரு கோடி..

ரகசிமாய்
சிமிட்டும் கண்ணில்
கவர்ச்சியுடன்
சாரல் மழைகள்
அவசரமாய்
எனக்கும்
தருவாயா

பகலில் ஒரு
பட்டாம்பூச்சி
இரவெல்லாம்
உந்தன் ஆட்சி
விளக்கனைய‌
விடுமுறை
தருவாயா

பரவசம் பரவசம்
நீ காஷ்மீர் வனத் தேன்
பழரசம்

மாலை
நேரத் தென்றல்
கூட‌ உன்னை தேடி
அலைகிற‌து
என் வாசல் வந்து
உன் பெயர்
சொல்லி ஹலோ
சொல்ல‌ சொல்கிற‌து

வழியில் ஒரு மாற்றம்
பகலில் தடுமாற்றம்
நீ போகும் சாலை
தவிர‌ நான் போனால்
எதுவும் பிடிக்கவில்லை

இது காதல்தானா
புரியவில்லை
இந்த புரியா
இன்பம் பழகவில்லை

நீ வந்து
சொல்லிடு காதோரம்
என் உயிரும்
மீண்டும் குடியேரும்
முகில் முதுகில்
போவோம் வெகு தூரம்..

விடு விடு என
உதரிப்போவாயா
சடுகுடுவென‌
சண்டையிடுவாயா

துறத்தித்துறத்தி
காதல் செய்ய
என் வாழ் நாள்
முழுதும் பற்றவில்லை
காதல் தீப்போல்
பற்றவில்லை

உரையாமல் நகரும்
பனிமூட்டம்
உடன் வந்து
வாடைக் குளிரூட்டும்

வார்தைகளில்
மௌனம்
பறிமாற்றம்
மொழிகிளுக்கு
முதல்வரும்
ஏமாற்றம்

Wednesday, October 7, 2009

நடத்துனர் இருக்கை

இது ஒன்றும்
புதிதல்லை
பயனத்தில்
பரிவில்லை

வெளிப்படையான‌
உண்மை
உழைப்பில்
எதற்கு நன்மை

காயம் படும்
கோபம் விடும்
வார்த்தைகள்
வலிக்க மோதல்
உபச‌ரிப்பில்
எதற்கு காதல்

நகர்ந்து வந்த‌
பாதை கூட‌
நகர் வந்து
மறக்கும்

நின்று வ்ந்த‌
பயண‌ம் கூட‌
நிற்காது
மறக்கும்

Monday, October 5, 2009

ரௌத்திரம் பழகு

முகவரி யின்றி
மறைந்த என்
பொறுமை

இடுக்கே உள்ள
காகிதம் விரல்
இடுக்கண் புடிபட
ரேகையாய்

பார்வையிலேயே
பொசிந்திருக்கும்
கோபத்தில்
வெட்பம் கசிந்திருக்கும்

வெயிலில்
வெட்டவெளியில்
வெளிச்சத்தின்
தலையணையில்
வியர்வை

கொக்கரிக்கும்
காட்சியில்
கொப்பளிக்கும்

கேடுகெட்டு
உறைந்து பின்
உமிழ்ந்திருக்கும்.


Wednesday, September 9, 2009

ஆழமில்லை.

பாதிவழியில்
பதில் போல்
திரும்பிவிட்டது

பறக்க விட்ட‌
கேள்விகள் எல்லாம்

விடையின்றி
வினாக்குறிபோல்

அதிர்ஷ்ட காற்று
அல்ல
என் பக்கம்
அடித்த‌து


சைகை
மொழிகள்
பழகியிருந்தால்
அசைவிலும்
அவள் பெயர்
எழுதிருப்பேன்

அவள் கண்களை
காணும்
துணிவு இருந்தால்
கார்கிலில் கூட‌
தனித்திருப்பேன்

பாறை கூட‌
உரையாடும்
எதிரொலியாக‌

என் பாதிவரியில்
திரும்பிவிட்டாய்
அறுவெறுப்பாக‌

உலகம் அறியாத‌
கிணற்றுதவளை போல்
உனை அறியாமல்
நினைவால் கெடுகிறேன் ..

புதைந்து ஆசைகள்
உனக்க்கும் இருக்கும்
மீட்பேன் காதலை..
ஆழமில்லை..

Tuesday, September 8, 2009

குடை நிழல் ..

கனவில்லாத உறக்கம்
களைப்புடன் காலை விடயல்

விழித்திருக்கும்
கண்முன் மறைந்திருக்கும்
பாதைகள்

கடனுக்கு வந்தது போல்
பதில்சொல்ல செல்
அலரும்

கருப்போ
சிவப்போ
கணினியுடன் காதல்

நொடிகளை சேமித்து
வாழ்க்கை வீணாகும்

அடை மழையில்
குடை நிழல்
அற்பமான சிந்தனைகள்

சிலைவைத்த பெண்கள்
இங்கே மலிவான‌
விலைக்கு
வேலை வந்திடும் வில்லைக்கு

காசுக்கு இங்கே
காதலர்க‌ள் ஏராலம்
என்றும் அவள்
நினைவுடன்

ஊதியம்

உப்பலமான
உடல் மேல்

கொப்பலமான‌
மழைதுளிகள்

சமுதிரத்திடம்
சேர வேண்டியது
சில அவன்
சுரத்திர்க்கும் ..

Thursday, June 18, 2009

என் சினிமா ஹீரோ

சிறுவயது முதல்
என் சினிமா ஹீரோ
நீதான்

எதையும் செய்தாய்
எனக்காக‌
என் சிரிப்பை
காணும் நொடிக்க்காக‌

உன்னோடு நான்
உலகையே
சுற்றினாலும்
அடுத்த் ரவுண்டும்
அலுக்காமல்
கூட்டிச்செல்வாய்

சக்கரை இனிமையாக‌
நீ விளக்கும் கற்பனை
உலகை இனிமையாக்கி
எனக்கு தரும் விற்பனை

என் முதுகெலும்பு
நிமிர்ந்த்ததும்
மிதிவண்டி
நக்ர்ந்ததும்
உன்னால் தானே

ஆலமரம் ஆயிரம்
விழிதிருக்கலாம்..
உன்க்கு நான்
விழாமல் நிறுத்த

என் கடமையை
மறந்தாலும்
நீ கண்டிப்பாக‌
உதவி கேள் ..

தேர்வுகள் எத்தனை
கடந்து வந்தாலும்
தந்தை சொல் தான்
மந்திரம் எனக்கு..

Sunday, May 24, 2009

மொழிகள் தேவையில்லை

அன்று நான்
கண்விழித்தது
அவளை 
பார்க்கத்தானோ..?

அலுவல் ஆயிரம்
இருந்தும்
காந்தம் ஈர்த்த 
துறும்பு நான்

பார்வையை பரிகொடுத்த‌
உடல் சென்ற‌து 
அவள் நிழலைக்கூட முட்டாமல்
உடன் சென்றது

சரியோ தவறோ 
சிந்திக்க‌ மனமில்லை
அவள் கடந்து போனதும்
களவுபோனது

குப்பைமேட்டுக்கு
காகிதமாய் காற்றில் 
பறந்தேன்
அவள் கால்தடங்கள்
திர‌ட்டிக்கவிதை
வரைந்தேன்

புன்னகையுடன் 
பார்த்த முகம்
கனவில் ..
வந்தால் உறக்கம் 
இல்லை

கண்ணில் வந்த‌
கனவே போதும்
மொழிகள்
தேவையில்லை

Wednesday, May 13, 2009

கர்ம வீரன் ..

my depressions and despirations on the election day ..

இரவின் கருவில்
விடியல் தரும் 
ப‌கலவன் 
பிறந்தான் 

வெளிச்சம் இட்டுரைத்தான்
வெயிலாய்
சுட்டுரைத்தான்..

எங்கள் குட்டையில்
தாமரை பூத்தது
நிழலின் நிறத்தில்
வெளிச்சம் பிறந்தது

இவனை போன்ற 
தலைவன்
பிறக்க இந்த‌
மண்ணில்

கொடுத்து வைத்தது
யார் 
கருவுற்ற 
பெண்ணில்

வாழை குறுத்தின்
துளி கூட‌
வெட்க்கப்படும்
தூய்மை

கல்விக்கண் உயிர்
கொடுத்து
நீ வளர்த்த 
தாய்மை

உனக்கு ஒருமுறை
ஓட்டுப்போட்டிட‌
உனைப்போல் யாரும் இல்லை
வாழ்ந்து காட்டிட ..

Wednesday, May 6, 2009

மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள் ..

இரைதேடும் பல்லிகளும்
நாம் இரையாகும் 
நேரமும்

நிற்கும் சுவரில்
ஓடிகொண்டிருந்தது

அடுத்த மாத 
அலுவல் குறிக்க‌
காற்றும் காலண்டரை
புரட்டிக்கொண்டிருந்தது

வாடை காற்றுதான்
வாடகை தந்தது
வெட்ப்பத்தை வெளியே
விசிறி எரிந்தது

ஆணியடித்தது போல்
நின்ற‌ கண்ணாடி
வேடிக்கை 
பார்த்த‌து 

தீக்குச்சியின் சாபம்
மெழுகு விளக்கையும் 
பற்றியது

தலைவந்தான்
இருவருக்கும்
கொல்லி வைப்பான்

நாட்டில் நான் காணும்
மனிதனின் குணங்கள்
என் வீட்டில் இருக்கும்
பொருட்களின் இனங்கள் ..

மீண்டும் ஒருமுறை
வாசித்துப் பாருங்கள்
நான் கூறும் உண்மையை
யோசித்துப்பாருங்கள் ..

Friday, April 24, 2009

அன்று இரவு உறக்கத்தில்

அன்று இரவு உறக்கத்தில்
அலறி அடித்து எழுந்தேன்

என் தூக்கத்தை 
விழுங்கிய கனவு

திற‌ந்த கண்ணுக்கு
தெரியாத உண்மை
மூடிய கண்முன்
முழிக்கிறது

.. வீட்டில் அனைவரும்
விறுவிறுபாய் 
மூட்டைகள் கட்டினார்கள்
அறுவெறுப்பாய்

யாருக்கத்தான் 
அழுகை வராது

இந்த மண்ணைப்பிரிய‌
மனமே வராது

சத்தம் வந்தால் 
வான‌த்தை பார்த்தார்கள்
அச்சத்துடன்

கட்டிய மூட்டையுடன்
கிளம்பவேண்டும்
நாங்கள் மிச்சத்துடன்

நடுக்கூடத்தூணை
கட்டிக்கொண்டு
க‌ண்களங்கி அழுகுரல்கள்
கதறிகொண்டு

பாசி படிந்த என் கொல்லைச்
சுவர் பாசம் வளர்த்த என்
குட்டிச்சுவர்

என் ஆறு வயது ஆசைஎல்லாம் 
அதன் மேல் மீண்டும் ஒரு முறை 
முட்டிடத்தான் 

நேரம் அதிகம் இல்லை
ஓட வேண்டும் எல்லைக்கு
ஓரே வேகமாக ஓட்டம் பிடித்தேன்
கொல்லைக்கு

திடீரென ஒரு சத்தமும் புகையும்
நான் முட்ட வந்த சுவரின் துகல் என்னை
வந்து முட்டியது

அடிப்பட்டு என் தலையில் 
இரத்தம் வழிந்தது
குண்டுகள் துலைத்து
ஊரெங்கும் 
சத்தம் வழிந்த‌து

அலறி அடித்து எழுந்தேன்
அன்று இரவு உறக்கத்தில்..

Tuesday, April 21, 2009

எங்க ஓட்டுப்போடனும்..

ஜனதொகை
ஏரிப்போச்சு
எங்க ஊருல‌

தலைக்க்கு ஒரு
ஓட்டுதான்
மதிப்பு
வேறில்ல‌

காந்திக்கடுத்து
ரூபா நோட்டில்
வேற முகமில்ல‌

நாணயதுக்கு
கூட இங்க‌
நாண‌யமில்ல‌

எங்க ஊரு
செழிக்கனுன்னு
ஓட்டு போட‌
சொன்னாங்க‌

உள்ளங்கை
கரையெடுத்து
விரலில் பொட்டு
வெச்சாங்க‌

சொன்னதெதுவும்
நடக்கலியே
சரியாதான்
போட்டேனா?

ஓட்டுப்போட‌
வழித்தவறி
வேறெங்கோ
பூட்டேனா??

Monday, April 13, 2009

ஆளுக்கு வேல தேவ !!

கடற்கறையோரம்
காவாய் கலக்குது
குளிக்கிர மீன் தான்
சுத்தம் செய்யுது

மழையில ஊரே
சேராப்போனது
சேந்த்து நீர் ரோட்டுல‌
ஆறா ஓடுது

ஓட்டுற வண்டியில்
புகையின்னும்
குறையல‌
காத்தெல்லாம்
கரித்துண்டு
நோய்க்கொன்னும்
குறையில்லை

பசியோடு 
ஊரெல்லாம்
பரதேசிக்கூட்டம்
அசந்தா ஆள்விழுங்கும்
எடுத்துடு நீ
ஓட்டம்

நல்ல வேல‌ புள்ள‌
வர‌
பத்து மாசம்
ஏழு நாளில் பொறந்தா
என்ன ஆகும்
தேசம்

தின்ன சோறு
செரிக்க தினம்
உழச்சுப்பாருங்க‌

பசிவந்தா பாமரன‌
நினைச்சுப்பாருங்க‌

Sunday, April 12, 2009

இந்த வாரம் ம‌ழ‌ வருமா !!

பருத்தி வித
பஞ்ஜோட  
பறப்ப‌து
போல் மனசு  

நினைனெனக்க‌ 
தூக்கம் வர்ல்ல‌ 
எனக்கு இது 
புதுசு  

பாதிகனவில் 
எழுந்திரிசேன் 
அவ முகத்த  
பாத்து  

நிலவில் கூட‌
அவ முகம் தான்  
ஏங்குது மனம்  
வேர்த்து  

சுரா மீன‌ 
வலையிலாம‌ 
வெரும் கையால் 
புடிப்பேன்  

அந்த மீனப் போல‌ 
கண்ண பாத்து  
வ‌லையில் நான் 
விழுந்தேன்  

பரங்கிமலை உயர்த்துள‌ 
நிமிர்ந்து நின்னயென்ன  
பாலைவனமாக்கிப்புட்டு 
போனா அந்த‌ பொண்ணே  

குலுகுலுன்னு  
வொன் பேச்சில் 
சாரல்  
வரும்  

நீ சம்மத‌ன்னு 
சொல்லிப்புட்டா 
மழையும்  
வரும்

Friday, April 10, 2009

வெளுத்ததெல்லாம்

சென்ற வருடம்
செழிப்பிருந்த‌து 
உழவன் முகத்தில் 
களிப்பிருந்த‌து  

நம்பிக்கை வளர்த்த  
பூமி அது  

பிறக்கப்போகும் 
பிள்ளைக்கு 
அடுத்த அறுவடை 
அள்ளித்தந்திடும் 

இவன் முகத்தில்
இருமாப்பு
மனைவியின் முகத்தில்
புன்சிரிப்பு

குலுங்கும் வலையோசை 
தகப்பன் பெருமையை 
கருவிடமும் 
கூறியது  

வானம் பார்த்த‌ 
பூமி அல்ல‌ 
வாய்க்கால் வார்த்த 
பூமி  

அரசியலும்
அசுத்தமும் 
ஆற்றைக்கெடுத்த‌து 

வரம் தரும் விதைகள் 
வரண்டது 
மண்ணோடு 

பச்சை ஆடை 
பறிபோனது 
பழுப்பு நிற‌த்துடன் 
நிர்வாண பூமி

ஊரின் மகிழ்ச்சியை 
பஞ்ஞம் கெடுத்த‌து 
புலம்பளுடன் ஊரே 
படையும் எடுத்த‌து 

ஒருவருடம் தான் 
தீர்ந்துவிடும் 
உஙகள் கவலையும்  
ஓய்ந்துவிடும் 

தலைவர்கள் எல்லாம் 
தைரியும் கூறினர் 
கும்பலைக்கலைக்க‌
பொய்க்கதை கூறினர் 

வீணாகவில்லை 
புரட்சி ஆனால்
ஒரு வருடம் 
வர‌ட்சி 

நிற்க நிழலில்லா 
ஊரில் 
இவன் நிழல்
தேடி பிறந்தது 

பெண் குழந்தை 

தாயும் சேயும்
நலம் ஆனால்
தந்தைக்கு இல்லை 
பலம்  

பெண்ணை எப்படி 
பேணி வள‌ர்ப்பான்  

இருபதாம் நூற்றாண்டு 
உபதேசம் செய்ய‌ 
வந்திடும் 
ஆனால் இன்று
உதவிக்கு அல்ல‌  

ஊரெங்கும் இவன்
கவலைக்கு தீர்வு
ஒன்றுதான்  

கள்ளிப்பால் அவன்  
கையில் கசிந்தது
மழலை பசியுடன் 
வாயைக்குவிழ்த்தது  

வெளுத்ததெல்லாம் பால்
குழந்தை நம்பியது 
பச்சை முகம் பார்த்து 
அவன் மனம் வெம்பியது  

விஷ‌த்தை விசிரி  
எரிந்தான் 
அள்ளி அனைத்து முத்தமிட்டான்  
முத்து மகளை  

அடுத்த அறுவடைக்கு
பொருத்திரு மகளே 
இந்த வயலும் செழித்துடும் 
நம் வாழ்வும் செழித்துடும் 

இவன் நம்பிக்கை வாழ்ந்த‌து 
பொய்க்கதையில் 
வெளுத்ததெல்லாம் பால்தான் 
இவன் கதையில் ..

Thursday, April 9, 2009

இடது பக்கம் திரும்ப அனுமதி இல்லை

இடது பக்கம்
திரும்ப அனுமதி
இல்லை

சாலைக்குறிகளை
குறிவைத்துப்
பாருங்க‌ள்

நெடுந்சாலையில் நான்
நின்ற நொடிகள்
உயிர்களை
கொன்ற நொடிகள்

என் பாடம்
உங்கள் 
படிப்பினைக்கு

வருமையின் நிறம் 
சிகப்பு 
நின்ற‌ வண்டிகளை
துரத்திய கூட்டம்

பையில் இருந்த‌
காசு என்
கையில் எடுபதை
கண்டதும்
குழந்தைகள்
ஏந்திய மழலைக்கூட்டம்

படை எடுத்தது
என் மனம்
படபடைத்தது
வெறும் காலை
தன் நிழலில் ஆற‌
விட்டு
ஏந்தி நின்ற
கைகளில்
வியர்வையில் ஈரமான‌
சில்லரைகள்

வருங்கால‌
இந்தியா
ரேகை பலன்
பார்த்தேன்

எதிர் திசை வாக‌னம்
விரட்டும் வேகத்தில் 
புகைமண்டல‌மான‌
(நெ)ந‌டுந்சாலைப் பூக்கள்

வளைவுகளில் 
வேகம் எடுத்தால்
முதற்பரிசு
யாருக்கு

விடலை பருவம்
பின்னால் இருபவள்
இருக்கப்பிடித்தாள்
ஓட்டுனர் கரங்களில்
முறுக்கு ஏரியது

புகைவிட்டுக்கிளம்பிய‌
நாயகனின்
வண்டி
இடது பக்கம்
திரும்பியது

இடது பக்கம்
திரும்ப அனுமதி
இல்லை

ஒய்ந்த ஆற்றை
கடப்பது போல்
சாலையின்
குறுக்கும் நெடுக்கும்
ஓட்டம் பிடித்த‌
கூட்டம்

நெரிசலில் 
தடுமாறின‌
சில ஆமைகள்

பாதி வரை தான்
பாதை தெரிந்த‌து
எழுபது வயது கிழவனை
வேகம் எடுத்த 
இருபதுகள்
ஏலனம் செய்தது

எதிர் பார்க்காத
விபத்து
கடந்து சென்ற இளைஞன்
கதறச்சென்றான்
நாயகன்

பின்னால் இருந்தவள்
முன்னால் விழுந்தாள்
விளக்குக்கம்பம்
வளைந்து போனது

நிசப்தம்
சில நொடிகளில்
மீண்டும்
சலசலப்புடன்

வாகனஙள்
ஜன்னல் ஒரம்
எட்டிப்பார்த்து
உச்சுக்கொட்டி

கடந்தது
எதிர் உள்ள குறிகளை
பார்க்காத‌தால்
விபத்து

வழிவிட்டது பச்சை நிறம்
இனி என் வரிசை 
வாகனங்களும்
சித‌ரியபடி செல்லத்துவங்கும்

காத்திருந்த நொடிகள்
என் வினாடி முள்ளையும்
நாடித்துடிப்பையும்
நிற்க வைத்து
கேள்வி கேட்டது

எதற்கிந்த வேகம்?
சாலைக்குறிகளை
குறிவைத்துப்
பாருங்க‌ள்

Wednesday, April 8, 2009

தொலைந்த நண்பனை தேடுங்க‌ள் ..

தனிமையில்
கண்ணீர் வடித்து
கடல் வளர்த்த‌
தீவுகள் 

உச்சியில் 
ஏக்கத்துடன் 
உரைந்து இருக்கும் 
இமயம் 

துணையின் 
தேவை என்ன?
விடைகூறும் 
விலாசம் இவை 

தொலைந்த
நண்பனை 
தேடுங்க‌ள் 

பொறாமையில்
பேராசையில் 
அலுவலின் அலைக்கழிப்பில் 

தொலைந்த  
நண்பனை
தேடுங்க‌ள் 

உணர்வுகளை
உலகில் உலவவிட‌ 
வடிகால் 
தேடுங்க‌ள் 

வேட்டையாடவே ஓநாய்கள்
நட்பிருக்கும் 
அச்சத்துடனே மான்கள்
இணைந்திருக்கும் 

தொலைதூர நட்பையும் 
இணையதள‌த்தில் அழைத்து  
அன்பால் 
இணைந்திடுங்கள்

Tuesday, March 24, 2009