Friday, April 24, 2009

அன்று இரவு உறக்கத்தில்

அன்று இரவு உறக்கத்தில்
அலறி அடித்து எழுந்தேன்

என் தூக்கத்தை 
விழுங்கிய கனவு

திற‌ந்த கண்ணுக்கு
தெரியாத உண்மை
மூடிய கண்முன்
முழிக்கிறது

.. வீட்டில் அனைவரும்
விறுவிறுபாய் 
மூட்டைகள் கட்டினார்கள்
அறுவெறுப்பாய்

யாருக்கத்தான் 
அழுகை வராது

இந்த மண்ணைப்பிரிய‌
மனமே வராது

சத்தம் வந்தால் 
வான‌த்தை பார்த்தார்கள்
அச்சத்துடன்

கட்டிய மூட்டையுடன்
கிளம்பவேண்டும்
நாங்கள் மிச்சத்துடன்

நடுக்கூடத்தூணை
கட்டிக்கொண்டு
க‌ண்களங்கி அழுகுரல்கள்
கதறிகொண்டு

பாசி படிந்த என் கொல்லைச்
சுவர் பாசம் வளர்த்த என்
குட்டிச்சுவர்

என் ஆறு வயது ஆசைஎல்லாம் 
அதன் மேல் மீண்டும் ஒரு முறை 
முட்டிடத்தான் 

நேரம் அதிகம் இல்லை
ஓட வேண்டும் எல்லைக்கு
ஓரே வேகமாக ஓட்டம் பிடித்தேன்
கொல்லைக்கு

திடீரென ஒரு சத்தமும் புகையும்
நான் முட்ட வந்த சுவரின் துகல் என்னை
வந்து முட்டியது

அடிப்பட்டு என் தலையில் 
இரத்தம் வழிந்தது
குண்டுகள் துலைத்து
ஊரெங்கும் 
சத்தம் வழிந்த‌து

அலறி அடித்து எழுந்தேன்
அன்று இரவு உறக்கத்தில்..

Tuesday, April 21, 2009

எங்க ஓட்டுப்போடனும்..

ஜனதொகை
ஏரிப்போச்சு
எங்க ஊருல‌

தலைக்க்கு ஒரு
ஓட்டுதான்
மதிப்பு
வேறில்ல‌

காந்திக்கடுத்து
ரூபா நோட்டில்
வேற முகமில்ல‌

நாணயதுக்கு
கூட இங்க‌
நாண‌யமில்ல‌

எங்க ஊரு
செழிக்கனுன்னு
ஓட்டு போட‌
சொன்னாங்க‌

உள்ளங்கை
கரையெடுத்து
விரலில் பொட்டு
வெச்சாங்க‌

சொன்னதெதுவும்
நடக்கலியே
சரியாதான்
போட்டேனா?

ஓட்டுப்போட‌
வழித்தவறி
வேறெங்கோ
பூட்டேனா??

Monday, April 13, 2009

ஆளுக்கு வேல தேவ !!

கடற்கறையோரம்
காவாய் கலக்குது
குளிக்கிர மீன் தான்
சுத்தம் செய்யுது

மழையில ஊரே
சேராப்போனது
சேந்த்து நீர் ரோட்டுல‌
ஆறா ஓடுது

ஓட்டுற வண்டியில்
புகையின்னும்
குறையல‌
காத்தெல்லாம்
கரித்துண்டு
நோய்க்கொன்னும்
குறையில்லை

பசியோடு 
ஊரெல்லாம்
பரதேசிக்கூட்டம்
அசந்தா ஆள்விழுங்கும்
எடுத்துடு நீ
ஓட்டம்

நல்ல வேல‌ புள்ள‌
வர‌
பத்து மாசம்
ஏழு நாளில் பொறந்தா
என்ன ஆகும்
தேசம்

தின்ன சோறு
செரிக்க தினம்
உழச்சுப்பாருங்க‌

பசிவந்தா பாமரன‌
நினைச்சுப்பாருங்க‌

Sunday, April 12, 2009

இந்த வாரம் ம‌ழ‌ வருமா !!

பருத்தி வித
பஞ்ஜோட  
பறப்ப‌து
போல் மனசு  

நினைனெனக்க‌ 
தூக்கம் வர்ல்ல‌ 
எனக்கு இது 
புதுசு  

பாதிகனவில் 
எழுந்திரிசேன் 
அவ முகத்த  
பாத்து  

நிலவில் கூட‌
அவ முகம் தான்  
ஏங்குது மனம்  
வேர்த்து  

சுரா மீன‌ 
வலையிலாம‌ 
வெரும் கையால் 
புடிப்பேன்  

அந்த மீனப் போல‌ 
கண்ண பாத்து  
வ‌லையில் நான் 
விழுந்தேன்  

பரங்கிமலை உயர்த்துள‌ 
நிமிர்ந்து நின்னயென்ன  
பாலைவனமாக்கிப்புட்டு 
போனா அந்த‌ பொண்ணே  

குலுகுலுன்னு  
வொன் பேச்சில் 
சாரல்  
வரும்  

நீ சம்மத‌ன்னு 
சொல்லிப்புட்டா 
மழையும்  
வரும்

Friday, April 10, 2009

வெளுத்ததெல்லாம்

சென்ற வருடம்
செழிப்பிருந்த‌து 
உழவன் முகத்தில் 
களிப்பிருந்த‌து  

நம்பிக்கை வளர்த்த  
பூமி அது  

பிறக்கப்போகும் 
பிள்ளைக்கு 
அடுத்த அறுவடை 
அள்ளித்தந்திடும் 

இவன் முகத்தில்
இருமாப்பு
மனைவியின் முகத்தில்
புன்சிரிப்பு

குலுங்கும் வலையோசை 
தகப்பன் பெருமையை 
கருவிடமும் 
கூறியது  

வானம் பார்த்த‌ 
பூமி அல்ல‌ 
வாய்க்கால் வார்த்த 
பூமி  

அரசியலும்
அசுத்தமும் 
ஆற்றைக்கெடுத்த‌து 

வரம் தரும் விதைகள் 
வரண்டது 
மண்ணோடு 

பச்சை ஆடை 
பறிபோனது 
பழுப்பு நிற‌த்துடன் 
நிர்வாண பூமி

ஊரின் மகிழ்ச்சியை 
பஞ்ஞம் கெடுத்த‌து 
புலம்பளுடன் ஊரே 
படையும் எடுத்த‌து 

ஒருவருடம் தான் 
தீர்ந்துவிடும் 
உஙகள் கவலையும்  
ஓய்ந்துவிடும் 

தலைவர்கள் எல்லாம் 
தைரியும் கூறினர் 
கும்பலைக்கலைக்க‌
பொய்க்கதை கூறினர் 

வீணாகவில்லை 
புரட்சி ஆனால்
ஒரு வருடம் 
வர‌ட்சி 

நிற்க நிழலில்லா 
ஊரில் 
இவன் நிழல்
தேடி பிறந்தது 

பெண் குழந்தை 

தாயும் சேயும்
நலம் ஆனால்
தந்தைக்கு இல்லை 
பலம்  

பெண்ணை எப்படி 
பேணி வள‌ர்ப்பான்  

இருபதாம் நூற்றாண்டு 
உபதேசம் செய்ய‌ 
வந்திடும் 
ஆனால் இன்று
உதவிக்கு அல்ல‌  

ஊரெங்கும் இவன்
கவலைக்கு தீர்வு
ஒன்றுதான்  

கள்ளிப்பால் அவன்  
கையில் கசிந்தது
மழலை பசியுடன் 
வாயைக்குவிழ்த்தது  

வெளுத்ததெல்லாம் பால்
குழந்தை நம்பியது 
பச்சை முகம் பார்த்து 
அவன் மனம் வெம்பியது  

விஷ‌த்தை விசிரி  
எரிந்தான் 
அள்ளி அனைத்து முத்தமிட்டான்  
முத்து மகளை  

அடுத்த அறுவடைக்கு
பொருத்திரு மகளே 
இந்த வயலும் செழித்துடும் 
நம் வாழ்வும் செழித்துடும் 

இவன் நம்பிக்கை வாழ்ந்த‌து 
பொய்க்கதையில் 
வெளுத்ததெல்லாம் பால்தான் 
இவன் கதையில் ..

Thursday, April 9, 2009

இடது பக்கம் திரும்ப அனுமதி இல்லை

இடது பக்கம்
திரும்ப அனுமதி
இல்லை

சாலைக்குறிகளை
குறிவைத்துப்
பாருங்க‌ள்

நெடுந்சாலையில் நான்
நின்ற நொடிகள்
உயிர்களை
கொன்ற நொடிகள்

என் பாடம்
உங்கள் 
படிப்பினைக்கு

வருமையின் நிறம் 
சிகப்பு 
நின்ற‌ வண்டிகளை
துரத்திய கூட்டம்

பையில் இருந்த‌
காசு என்
கையில் எடுபதை
கண்டதும்
குழந்தைகள்
ஏந்திய மழலைக்கூட்டம்

படை எடுத்தது
என் மனம்
படபடைத்தது
வெறும் காலை
தன் நிழலில் ஆற‌
விட்டு
ஏந்தி நின்ற
கைகளில்
வியர்வையில் ஈரமான‌
சில்லரைகள்

வருங்கால‌
இந்தியா
ரேகை பலன்
பார்த்தேன்

எதிர் திசை வாக‌னம்
விரட்டும் வேகத்தில் 
புகைமண்டல‌மான‌
(நெ)ந‌டுந்சாலைப் பூக்கள்

வளைவுகளில் 
வேகம் எடுத்தால்
முதற்பரிசு
யாருக்கு

விடலை பருவம்
பின்னால் இருபவள்
இருக்கப்பிடித்தாள்
ஓட்டுனர் கரங்களில்
முறுக்கு ஏரியது

புகைவிட்டுக்கிளம்பிய‌
நாயகனின்
வண்டி
இடது பக்கம்
திரும்பியது

இடது பக்கம்
திரும்ப அனுமதி
இல்லை

ஒய்ந்த ஆற்றை
கடப்பது போல்
சாலையின்
குறுக்கும் நெடுக்கும்
ஓட்டம் பிடித்த‌
கூட்டம்

நெரிசலில் 
தடுமாறின‌
சில ஆமைகள்

பாதி வரை தான்
பாதை தெரிந்த‌து
எழுபது வயது கிழவனை
வேகம் எடுத்த 
இருபதுகள்
ஏலனம் செய்தது

எதிர் பார்க்காத
விபத்து
கடந்து சென்ற இளைஞன்
கதறச்சென்றான்
நாயகன்

பின்னால் இருந்தவள்
முன்னால் விழுந்தாள்
விளக்குக்கம்பம்
வளைந்து போனது

நிசப்தம்
சில நொடிகளில்
மீண்டும்
சலசலப்புடன்

வாகனஙள்
ஜன்னல் ஒரம்
எட்டிப்பார்த்து
உச்சுக்கொட்டி

கடந்தது
எதிர் உள்ள குறிகளை
பார்க்காத‌தால்
விபத்து

வழிவிட்டது பச்சை நிறம்
இனி என் வரிசை 
வாகனங்களும்
சித‌ரியபடி செல்லத்துவங்கும்

காத்திருந்த நொடிகள்
என் வினாடி முள்ளையும்
நாடித்துடிப்பையும்
நிற்க வைத்து
கேள்வி கேட்டது

எதற்கிந்த வேகம்?
சாலைக்குறிகளை
குறிவைத்துப்
பாருங்க‌ள்

Wednesday, April 8, 2009

தொலைந்த நண்பனை தேடுங்க‌ள் ..

தனிமையில்
கண்ணீர் வடித்து
கடல் வளர்த்த‌
தீவுகள் 

உச்சியில் 
ஏக்கத்துடன் 
உரைந்து இருக்கும் 
இமயம் 

துணையின் 
தேவை என்ன?
விடைகூறும் 
விலாசம் இவை 

தொலைந்த
நண்பனை 
தேடுங்க‌ள் 

பொறாமையில்
பேராசையில் 
அலுவலின் அலைக்கழிப்பில் 

தொலைந்த  
நண்பனை
தேடுங்க‌ள் 

உணர்வுகளை
உலகில் உலவவிட‌ 
வடிகால் 
தேடுங்க‌ள் 

வேட்டையாடவே ஓநாய்கள்
நட்பிருக்கும் 
அச்சத்துடனே மான்கள்
இணைந்திருக்கும் 

தொலைதூர நட்பையும் 
இணையதள‌த்தில் அழைத்து  
அன்பால் 
இணைந்திடுங்கள்