Sunday, May 24, 2009

மொழிகள் தேவையில்லை

அன்று நான்
கண்விழித்தது
அவளை 
பார்க்கத்தானோ..?

அலுவல் ஆயிரம்
இருந்தும்
காந்தம் ஈர்த்த 
துறும்பு நான்

பார்வையை பரிகொடுத்த‌
உடல் சென்ற‌து 
அவள் நிழலைக்கூட முட்டாமல்
உடன் சென்றது

சரியோ தவறோ 
சிந்திக்க‌ மனமில்லை
அவள் கடந்து போனதும்
களவுபோனது

குப்பைமேட்டுக்கு
காகிதமாய் காற்றில் 
பறந்தேன்
அவள் கால்தடங்கள்
திர‌ட்டிக்கவிதை
வரைந்தேன்

புன்னகையுடன் 
பார்த்த முகம்
கனவில் ..
வந்தால் உறக்கம் 
இல்லை

கண்ணில் வந்த‌
கனவே போதும்
மொழிகள்
தேவையில்லை

Wednesday, May 13, 2009

கர்ம வீரன் ..

my depressions and despirations on the election day ..

இரவின் கருவில்
விடியல் தரும் 
ப‌கலவன் 
பிறந்தான் 

வெளிச்சம் இட்டுரைத்தான்
வெயிலாய்
சுட்டுரைத்தான்..

எங்கள் குட்டையில்
தாமரை பூத்தது
நிழலின் நிறத்தில்
வெளிச்சம் பிறந்தது

இவனை போன்ற 
தலைவன்
பிறக்க இந்த‌
மண்ணில்

கொடுத்து வைத்தது
யார் 
கருவுற்ற 
பெண்ணில்

வாழை குறுத்தின்
துளி கூட‌
வெட்க்கப்படும்
தூய்மை

கல்விக்கண் உயிர்
கொடுத்து
நீ வளர்த்த 
தாய்மை

உனக்கு ஒருமுறை
ஓட்டுப்போட்டிட‌
உனைப்போல் யாரும் இல்லை
வாழ்ந்து காட்டிட ..

Wednesday, May 6, 2009

மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள் ..

இரைதேடும் பல்லிகளும்
நாம் இரையாகும் 
நேரமும்

நிற்கும் சுவரில்
ஓடிகொண்டிருந்தது

அடுத்த மாத 
அலுவல் குறிக்க‌
காற்றும் காலண்டரை
புரட்டிக்கொண்டிருந்தது

வாடை காற்றுதான்
வாடகை தந்தது
வெட்ப்பத்தை வெளியே
விசிறி எரிந்தது

ஆணியடித்தது போல்
நின்ற‌ கண்ணாடி
வேடிக்கை 
பார்த்த‌து 

தீக்குச்சியின் சாபம்
மெழுகு விளக்கையும் 
பற்றியது

தலைவந்தான்
இருவருக்கும்
கொல்லி வைப்பான்

நாட்டில் நான் காணும்
மனிதனின் குணங்கள்
என் வீட்டில் இருக்கும்
பொருட்களின் இனங்கள் ..

மீண்டும் ஒருமுறை
வாசித்துப் பாருங்கள்
நான் கூறும் உண்மையை
யோசித்துப்பாருங்கள் ..