Thursday, April 9, 2009

இடது பக்கம் திரும்ப அனுமதி இல்லை

இடது பக்கம்
திரும்ப அனுமதி
இல்லை

சாலைக்குறிகளை
குறிவைத்துப்
பாருங்க‌ள்

நெடுந்சாலையில் நான்
நின்ற நொடிகள்
உயிர்களை
கொன்ற நொடிகள்

என் பாடம்
உங்கள் 
படிப்பினைக்கு

வருமையின் நிறம் 
சிகப்பு 
நின்ற‌ வண்டிகளை
துரத்திய கூட்டம்

பையில் இருந்த‌
காசு என்
கையில் எடுபதை
கண்டதும்
குழந்தைகள்
ஏந்திய மழலைக்கூட்டம்

படை எடுத்தது
என் மனம்
படபடைத்தது
வெறும் காலை
தன் நிழலில் ஆற‌
விட்டு
ஏந்தி நின்ற
கைகளில்
வியர்வையில் ஈரமான‌
சில்லரைகள்

வருங்கால‌
இந்தியா
ரேகை பலன்
பார்த்தேன்

எதிர் திசை வாக‌னம்
விரட்டும் வேகத்தில் 
புகைமண்டல‌மான‌
(நெ)ந‌டுந்சாலைப் பூக்கள்

வளைவுகளில் 
வேகம் எடுத்தால்
முதற்பரிசு
யாருக்கு

விடலை பருவம்
பின்னால் இருபவள்
இருக்கப்பிடித்தாள்
ஓட்டுனர் கரங்களில்
முறுக்கு ஏரியது

புகைவிட்டுக்கிளம்பிய‌
நாயகனின்
வண்டி
இடது பக்கம்
திரும்பியது

இடது பக்கம்
திரும்ப அனுமதி
இல்லை

ஒய்ந்த ஆற்றை
கடப்பது போல்
சாலையின்
குறுக்கும் நெடுக்கும்
ஓட்டம் பிடித்த‌
கூட்டம்

நெரிசலில் 
தடுமாறின‌
சில ஆமைகள்

பாதி வரை தான்
பாதை தெரிந்த‌து
எழுபது வயது கிழவனை
வேகம் எடுத்த 
இருபதுகள்
ஏலனம் செய்தது

எதிர் பார்க்காத
விபத்து
கடந்து சென்ற இளைஞன்
கதறச்சென்றான்
நாயகன்

பின்னால் இருந்தவள்
முன்னால் விழுந்தாள்
விளக்குக்கம்பம்
வளைந்து போனது

நிசப்தம்
சில நொடிகளில்
மீண்டும்
சலசலப்புடன்

வாகனஙள்
ஜன்னல் ஒரம்
எட்டிப்பார்த்து
உச்சுக்கொட்டி

கடந்தது
எதிர் உள்ள குறிகளை
பார்க்காத‌தால்
விபத்து

வழிவிட்டது பச்சை நிறம்
இனி என் வரிசை 
வாகனங்களும்
சித‌ரியபடி செல்லத்துவங்கும்

காத்திருந்த நொடிகள்
என் வினாடி முள்ளையும்
நாடித்துடிப்பையும்
நிற்க வைத்து
கேள்வி கேட்டது

எதற்கிந்த வேகம்?
சாலைக்குறிகளை
குறிவைத்துப்
பாருங்க‌ள்

No comments: