Friday, April 10, 2009

வெளுத்ததெல்லாம்

சென்ற வருடம்
செழிப்பிருந்த‌து 
உழவன் முகத்தில் 
களிப்பிருந்த‌து  

நம்பிக்கை வளர்த்த  
பூமி அது  

பிறக்கப்போகும் 
பிள்ளைக்கு 
அடுத்த அறுவடை 
அள்ளித்தந்திடும் 

இவன் முகத்தில்
இருமாப்பு
மனைவியின் முகத்தில்
புன்சிரிப்பு

குலுங்கும் வலையோசை 
தகப்பன் பெருமையை 
கருவிடமும் 
கூறியது  

வானம் பார்த்த‌ 
பூமி அல்ல‌ 
வாய்க்கால் வார்த்த 
பூமி  

அரசியலும்
அசுத்தமும் 
ஆற்றைக்கெடுத்த‌து 

வரம் தரும் விதைகள் 
வரண்டது 
மண்ணோடு 

பச்சை ஆடை 
பறிபோனது 
பழுப்பு நிற‌த்துடன் 
நிர்வாண பூமி

ஊரின் மகிழ்ச்சியை 
பஞ்ஞம் கெடுத்த‌து 
புலம்பளுடன் ஊரே 
படையும் எடுத்த‌து 

ஒருவருடம் தான் 
தீர்ந்துவிடும் 
உஙகள் கவலையும்  
ஓய்ந்துவிடும் 

தலைவர்கள் எல்லாம் 
தைரியும் கூறினர் 
கும்பலைக்கலைக்க‌
பொய்க்கதை கூறினர் 

வீணாகவில்லை 
புரட்சி ஆனால்
ஒரு வருடம் 
வர‌ட்சி 

நிற்க நிழலில்லா 
ஊரில் 
இவன் நிழல்
தேடி பிறந்தது 

பெண் குழந்தை 

தாயும் சேயும்
நலம் ஆனால்
தந்தைக்கு இல்லை 
பலம்  

பெண்ணை எப்படி 
பேணி வள‌ர்ப்பான்  

இருபதாம் நூற்றாண்டு 
உபதேசம் செய்ய‌ 
வந்திடும் 
ஆனால் இன்று
உதவிக்கு அல்ல‌  

ஊரெங்கும் இவன்
கவலைக்கு தீர்வு
ஒன்றுதான்  

கள்ளிப்பால் அவன்  
கையில் கசிந்தது
மழலை பசியுடன் 
வாயைக்குவிழ்த்தது  

வெளுத்ததெல்லாம் பால்
குழந்தை நம்பியது 
பச்சை முகம் பார்த்து 
அவன் மனம் வெம்பியது  

விஷ‌த்தை விசிரி  
எரிந்தான் 
அள்ளி அனைத்து முத்தமிட்டான்  
முத்து மகளை  

அடுத்த அறுவடைக்கு
பொருத்திரு மகளே 
இந்த வயலும் செழித்துடும் 
நம் வாழ்வும் செழித்துடும் 

இவன் நம்பிக்கை வாழ்ந்த‌து 
பொய்க்கதையில் 
வெளுத்ததெல்லாம் பால்தான் 
இவன் கதையில் ..

No comments: